திருச்சி கிராப்பட்டி செளடாம்பிகா மேல்நிலைபள்ளியில் கே.ஜி.மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது.
திருச்சி கிராப்பட்டி செளடாம்பிகா மேல்நிலைபள்ளியில் கே.ஜி.மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது.
சௌடாம்பிகா கல்விக்குழுமத்தின்
கிராப்பட்டி செல்லம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்
விஜயதசமி மாணவர் சேர்க்கை விழா
சௌடாம்பிகா கல்விக்குழுமத்தின் ஓர் அங்கமான… கிராஃபோர்டு செல்லம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு KG வகுப்பு மாணாக்கர்கள் சேர்க்கை நடைபெற்றது.
சௌடாம்பிகா கல்விக்குழுமத் தலைவர் ராமமூர்த்தி, சௌடாம்பிகா கல்விக்குழும செயலாளர் செந்தூர் செல்வன் ஆகியோரின் வழிகாட்டுதல்படி

கல்வி ஆலோசகர் சிவகாமி விஜயகுமார் ஆலோசனைக்கேற்ப மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது.
அரசு வழிகாட்டுதல்படி கொரோனா பாதுகாப்புகள் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டது. நம் பாரம்பரிய முறைப்படி நடைப்பெற்ற விஜயதசமி விழாவில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கைப்பிடித்து தாய்மொழியான தமிழில் ‘அ’ மற்றும் ‘ஓம்’ எழுதி குழந்தைகளின் கல்வியை சிறப்புடன் தொடங்கி வைத்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் அருள்குமார், மேல்நிலைப்பள்ளி முதல்வர் நடராஜன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.