Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தஞ்சையில் நடைபெற்ற தடகள போட்டியில் வெற்றி பெற்று திருச்சி திரும்பிய விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா.

தஞ்சையில் நடைபெற்ற தடகள போட்டியில் வெற்றி பெற்று திருச்சி திரும்பிய விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா.

0

'- Advertisement -

தஞ்சை மாவட்டத்தில் டெல்டா மாவட்டங்களிடையேயான தடகள விளையாட்டு போட்டி கடந்த 9 மற்றும் 10 ம் தேதி நடைபெற்றது.

இப்போட்டியில் திருச்சி ,தஞ்சை திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து தடகள விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

இதில் திருச்சி காவேரி ஸ்போர்ட்ஸ் அகடமியிலிருந்து 40 க்கும் மேற்பட்ட தடகள விளையாட்டு வீரர்கள் பயிற்ச்சியாளர் முனியாண்டி தலைமையில் Tசுரேஷ்பாபு மற்றும் மேலாளர் மணி ஆகியோரின் ஒருங்கிணைப்பில்போட்டிகளில் பங்கேற்றனர்.

இப்போட்டியில் பல்வேறு பிரிவுகளில் திருச்சி காவேரி ஸ்போர்ட்ஸ் அகடமியை சேர்ந்த தடகள விளையாட்டு வீரர்கள்

 

1.கிஷோர் (under20)

1500mts 2ndPlace

2.ரோகித்(under16) 100mt 1st Place 300mts 2nd Place

3.சிவதர்ஷனி (under16) Shotput 1st Place

4.கலையரசி (under14) HighJump 3rd place

5.அக்ஸயா(under12) 50mts 3rd Place

6.சிவரஞ்சனி (under12)Throw ball 3rdplace

7. தமிழகன் (under12)Throw ball 1st place உள்ளிட்ட இடங்களை பிடித்தனர்.

வெற்றி பெற்றவர்களுக்கு திருச்சி கல்லுகுழி ரயில்வே விளையாட்டு மைதானத்தில் மாற்றம் அமைப்பின் சார்பில் பொன்னாடை அனிவித்து பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் காவேரி ஸ்போர்ட்ஸ் அகடமியின் பயிற்ச்சியாளர்கள் முனியாண்டி சுரேஷ்பாபு,மணி, வழக்கறிஞர் ஆறுமுகம், செந்தில்குமார் மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் நடிகருமான ஆர்.ஏ.தாமஸ்

பீர்மீரான்,(T.T.I Srly) சிவசங்கர், அருளானந்தராஜ்,
மைக்கேல், பிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் இந்நிகழ்வில் திரளான விளையாட்டு வீரர்கள் அவர்களின் பெற்றோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.