திருச்சியில் இந்திய கணசங்கம் கட்சியின் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.
திருச்சியில் இந்திய கணசங்கம் கட்சியின் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஹோட்டலில் இந்திய கணசங்கம் கட்சியின் சார்பில்
அம்பேத்கர் பௌத்தம் தழுவிய 65 ம் ஆண்டு விழா,
பெரியாரின் 143 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா .
இந்திய அரசாங்கம் கட்சியின் ஆறாம் ஆண்டு விழா.
என முப்பெரும் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு பொது செயலாளர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார்.
துணைத் தலைவர் துரைசாமி அமைப்புச் செயலாளகள் சண்முகம், பாலகிருஷ்ணன், துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொருளாளர் தாமரைச்செல்வி கோவிந்தசாமி வரவேற்புரை ஆற்றினார்.
அவைத்தலைவர் மகான்.தீர்மான வரைவுக்குழு தலைவர் சஞ்சீவி,தேர்தல் பணிக்குழு தலைவர் விஜயன் | கொள்கை பரப்பு செயலாளர் கந்தசாமி, சட்ட ஆலோசகர் தமிழ் ராஜேந்திரன், திராவிடர் கழக பெரியசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இவ்விழாவில் 2021 ஆம் ஆண்டுக்கான ஆளுமை விருதுகள்
முருகேசன், பாபு செபாஸ்டின்,மாணிக்கம் , பானுமதி, கென்னடி, தனராஜ், திருமலை ஆகியோருக்கு கண சங்க கட்சியின் நிறுவன தலைவர் முத்துசாமி அவர்களால்
வழங்கப்பட்டது.
கண்ணன், தலைமை நிலைய செயலாளர் பழனி சுப்ரமணியன் ஆகியோர் நன்றி உரை ஆற்றினர்.
இந்த நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதுமிருந்து நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]
 
						 
						
