கணவரை கொன்ற 3 பேரைக் கைது செய்யக்கோரி குழந்தைகளுடன் கலெக்டரிடம் பெண் மனு.
கணவரை கொன்ற 3 பேரைக் கைது செய்யக்கோரி குழந்தைகளுடன் கலெக்டரிடம் பெண் மனு.
கணவர் கொலையில் தொடர்புடைய
3 பேரை கைது செய்ய வேண்டும்.
குழந்தைகளுடன் கலெக்டரிடம் மனு.
திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் வடக்கு சித்தாம்பூர் மாரியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மருதை .இவரது மனைவி புஷ்பா.
இவர் இன்று தனது கொழுந்தனார் மற்றும் குழந்தைகளுடன் வந்து கலெக்டரை சந்தித்து ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-
நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். எனக்கு 4 குழந்தைகள் உள்ளனர். தற்போது சிறிய ஓட்டு வில்லை வீட்டில் குடியிருந்து வருகிறேன்.
என் கணவரை கடந்த 24 -9 -2021 அன்று திட்டமிட்டு கொலை செய்துவிட்டார்கள். இந்தக் கொலை நடப்பதற்கு முந்தைய தினம் சேட்டு, ருபன், பவானி ஆகிய 3 பேர் அரிவாள் ,கம்பி ,தடி போன்ற ஆயுதங்களுடன் வந்து என்னையும் என் கணவரையும் கொலை மிரட்டல் விடுத்தனர்,
ஆகவே இந்த மூன்று பேருக்கும் இந்த கொலையில் நேரடி தொடர்பு இருப்பதாக தெரிகிறது .எனவே சம்பந்தப்பட்ட 3 பேரையுஉடனே கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்
மேலும் அளித்துள்ள மனுவில் பாதிக்கப்பட்ட எனக்கு தமிழக அரசு வழங்கும் நிவாரண நிதி வழங்க வேண்டும், அரசு வீடு ஒதுக்கித் தர வேண்டும், எனது மூன்றாவது மகள் லோகேஸ்வரி இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டு நடக்க இயலாத நிலையில் உள்ளார் அவரது மருத்துவ செலவை அரசு ஏற்க வேண்டும் என கூறியுள்ளார்.