Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

உ.பி.மாநில அரசை கண்டித்து திருச்சியில் எஸ்.டி.பி.ஐயினர் மறியல். 100க்கு மேற்ப்பட்டேர் கைது.

உ.பி.மாநில அரசை கண்டித்து திருச்சியில் எஸ்.டி.பி.ஐயினர் மறியல். 100க்கு மேற்ப்பட்டேர் கைது.

0

'- Advertisement -

மத்திய அமைச்சர் அஜய் குமார் மிஷ்ராவின் மகன் விவாசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் மீது கார் மோதியதில் 8 விவாசாயிகள் மரணம் இந்த கொடுர செயலுக்கு நீதி வேண்டி பாஜக அரசை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியின் திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாக மாபெரும் சாலை மறியல் போராட்டம்.

உத்தரப்பிரதேசத்தில் வேளாண் சட்டங்களை எதிர்த்து நடந்த விவசாயிகள் போராட்டத்தின் போது அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் மோதி விவசாயிகள் 4 பேர் உள்பட 8 பேர் பலியான சம்பவம் நாட்டையே பெறும் துயரத்திற்கு ஆளாக்கியது.

உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் காரில் சென்றபோது விவசாயிகள் கறுப்புக் கொடி காட்ட முயற்சித்துள்ளனர்.

அப்போது விவசாயிகள் மீது அமைச்சரின் மகன் காரை ஏற்றியதாகக் கூறப்படுகிறது. இதில் 4 விவசாயிகள் உயிரிழந்ததாக சம்யுக்தா கிசான் மோச்சார் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இந்த வெறிச்செயலானது வேண்டுமென்ற நடைபெற்றது என்றும் கூறினர். இந்த வன்முறையில் உயிரிழந்தவர்களை சந்திக்க காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரியங்கா காந்தி சென்ற போது அவரையும் உபி அரசாங்கம் கைது செய்தது.

Suresh

ஆகவே இந்த கொடுர சம்பவத்திற்கு நீதி வேண்டியும், உபி பாஜக அரசை கண்டித்தும் திருச்சி மாவட்டம் எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக மாபெரும் சாலை மறியல் நேற்று மாலை திருச்சி காந்தி மார்க்கெட் அருகில் நடைபெற்றது.

இந்த போராட்டத்திற்கு திருச்சி தெற்கு மாவட்ட பொதுசெயலாளர் தமீம் அன்சாரி தலைமை தாங்கினார். மேலும் மாவட்ட துணைதலைவர் பிச்சைகனி அவர்களும், மாவட்ட செயலாளர்கள் ஏர்போர்ட் மஜித், மதர் ஜமால் / பொருளாளர் சுஹைப் , மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அப்பாஸ், பக்ருதின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த போராட்டத்தில் கட்சியின் அனைத்து தொகுதி, கிளை, வர்த்தக அணி, தொழிற்சங்க அணி என அனைத்து நிர்வாகிகளும், பொதுமக்களும், சமுக ஆர்வலர்களும் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழூப்பினர்.

சாலை மறியலில் ஈடுபட்ட 100 க்கும் மேற்பட்ட நபர்கள் கைதுகள் செய்யப்பட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.