திருச்சியில் ஃபிரண்ட்ஸ் டிரஸ்ட் மற்றும் மகேந்திரா பைனான்ஸ் சார்பில் அரசுப் பள்ளியில் மரக்கன்றுகள் நடப்பட்டது
திருச்சியில் ஃபிரண்ட்ஸ் டிரஸ்ட் மற்றும் மகேந்திரா பைனான்ஸ் சார்பில் அரசுப் பள்ளியில் மரக்கன்றுகள் நடப்பட்டது
திருச்சி மணிகண்டம் இனாம் பெரியநாயகி சத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மஹிந்திரா பைனான்ஸ் மற்றும் ஃப்ரெண்ட்ஸ் ட்ரஸ்ட் சார்பாக மரம் நடும் விழா நடைபெற்றது.
திருச்சி ஃப்ரெண்ட்ஸ் ட்ரஸ்ட் மற்றும் மஹிந்திரா பைனான்ஸ் இணைந்து திருச்சியில் உள்ள அரசு பள்ளிகளில் 1250 மரக்கன்றுகள் நட திட்டமிட்டிருந்தன.
அதனையொட்டி திருச்சி மணிகண்டம் இனாம் பெரியநாயகி சத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி வளாகத்தில் மரச்செடி நடும் நிகழ்ச்சியினை பள்ளி தலைமை ஆசிரியர் செல்வி தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து பேசிய தலைமை ஆசிரியர் ” கொரோனா தொற்றுச்சூழலில் நாம் பிராண வாயுவை அதிகம் எதிர்பார்க்கிறோம். நன்றாக வளர்ந்த மரமொன்று நான்கு நபர்கள் கொண்ட குடும்பத்துக்குத் தேவையான பிராண வாயுவை தரவல்லது.
எனவே மாணவ, மாணவியர் பொதுமக்கள் அனைவரும் தங்கள் இல்லங்களில் அல்லது வாய்ப்புள்ள இடங்களில் மரங்களை நட்டு பாதுகாக்க வேண்டும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் ஃப்ரெண்ட்ஸ் ட்ரஸ்ட் தலைவர் ரஞ்சித்குமார், மஹிந்திரா பைனான்ஸ் ஶ்ரீராம் சிவகுமார், கருணாநிதி,விஜய ராகவன், ஆசிரியர்கள் ஹேமலதா, மேரி மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.