ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரின் பொன்மலை ரயில்வே போலீஸ் நிலையம் சார்பில் 36 ஆவது ரைசிங் தின (உதயமான நாள்) விழாவை முன்னிட்டு முதியோர் இல்லத்திற்கு உணவு வழங்கப்பட்டது.
திருச்சி கோட்ட முதுநிலை பாதுகாப்பு ஆணையர் ராமகிருஷ்ணன் மற்றும் உதவி ஆணையர் சரத்குமார் பாதி ஆகியோரின் உத்தரவின்பேரில் பொன்மலை ரயில்வே போலீஸ் நிலையம் சார்பில் ஆய்வாளர் ஸ்ரீதரன் தலைமையில் 36ஆவது ரைசிங் தினவிழா கொண்டாடப்பட்டது.
இதனை முன்னிட்டு திருச்சி விமான நிலையம் அருகே உள்ள அனைக்கும் கரங்கள் முதியோர் இல்லத்தில் ஆதரவற்ற முதியவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் உதவி ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் மற்றும் ரயில்வே போலீஸ் பாதுகாப்பு படையினர் பலர் கலந்து கொண்டனர்.
மேலும்
ரயில்வே கேட்டில் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
ரயில்வே லெவல் கிராசிங் கேட்டை கடப்பவர்களுக்கு எச்சரிக்கையாக எச்சரிக்கை பலகை முன் வாகனங்களை நிறுத்தவும். ரயில் வரவில்லை என்பதனை இருபுறமும் பார்த்து உறுதி செய்யவும். ரயில் வண்டியின் ஒலியினை கவனித்து கடக்கவும்.
லெவல் கிராசிங் கேட்டினை கடக்கும்போது கைப்பேசி மற்றும் இயர்போன் பயன்படுத்தவேண்டாம். என்ற பல எச்சரிக்கைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொன்மலை மஞ்சத்திடல் ரயில்வே கேட்டில் இருந்து தஞ்சை மாவட்டம் அயனாவரம் ரயில்வே கேட் வரை துண்டுப் பிரசுரங்களை வாகன ஓட்டிகளுக்கு வழங்கினர் .
இந்த நிகழ்வில் உதவி ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் மற்றும் ரயில்வே போலீஸ் பாதுகாப்பு படையினர் பலர் கலந்து கொண்டனர்.