ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திருச்சி திமுக வேட்பாளர் பட்டியல், அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார்.
ஊரக உள்ளாட்சி தேர்தல் :
திருச்சி மாவட்ட திமுக வேட்பாளர் பட்டியல்
அமைச்சர் அன்பில்
மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு.
தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் மற்றும் மாநிலம் முழுவதும் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் 2 கட்டமாக நடக்கிறது.
அதன்படி, திருச்சி மாவட்டத்தில் காலியாக உள்ள 3 ஒன்றிய கவுன்சிலர், 2 ஊராட்சி தலைவர், பஞ்சாயத்துகளில் 19 வார்டு உறுப்பினர்கள் என 24 பதவிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வையம்பட்டி ஒன்றியம் 6-வது வார்டு (எஸ்.சி-பெண்), மருங்காபுரி ஒன்றியம் 10-வது வார்டு (பொது-பெண்), துறையூர் ஒன்றியம் 13-வது வார்டு (பொது) ஆகிய 3 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவிக்கு, அரசியல் கட்சி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுகிறார்கள்.
இந்த 3 வார்டு கவுன்சிலர் பதவிக்கு ஏற்கனவே அ.தி.மு.க.சார்பில் வேட்பாளர்கள் அறிக்கப்பட்டு விட்டனர்.
இந்த நிலையில் திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க.வுக்குட்பட்ட 2 வார்டுகளில் போட்டியிடும் பெண் வேட்பாளர்களை மாவட்ட செயலாளரும் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.
அதன்படி, வையம்பட்டி ஒன்றியம் 6-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு ஓந்தாம்பட்டியை சேர்ந்த பழனிசாமி மனைவி செல்லமணி,
மருங்காபுரி ஒன்றியம் 10-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு வளநாடு லால்பாஷா தெருவை சேர்ந்த சபியுல்லா மனைவி சபியுன் நிஷா ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
வேட்பாளர்கள் இருவரையும் நேற்று இரவு 8 மணிக்கு திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க.அலுவலகத்தில், முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.ஆர்.சேகரன் அறிமுகப்படுத்தி வைத்து, அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.
பெண் வேட்பாளர்கள் இருவரும் மனு தாக்கலுக்கு கடைசி நாளான இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு தாக்கல் செய்கின்றனர்.