Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழகத்தில் உள்ள பெரியார் சிலைகளை அகற்றி விட்டு திருவள்ளுவர், ராமானுஜர் சிலைகளை அவ்விடத்தில் நிறுவ வேண்டும்.அகில பாரத மக்கள் கட்சி கூட்டத்தில் முடிவு.

0

'- Advertisement -

திருச்சி
அருண் ஹோட்டலில்
அகில பாரத மக்கள் கட்சி மற்றும் ராஷ்ட்ரிய சனாதன சேவா சங்கம் சார்பில் கலந்தாய்வு கூட்டம்
அகில பாரத மக்கள் கட்சி நிறுவனர்
எஸ் ராமநாதன் தலைமையில் நடைபெற்றது.


இந்த கூட்டத்தில் மாநிலத் தலைவர் பாபு பரமேஸ்வரன், திருவாரூர் மாவட்ட தலைவர் ரமேஷ், மயிலாடுதுறை மாவட்ட தலைவர் சரவண சத்யா, திருநெல்வேலி மாவட்ட தலைவர் குரு சங்கர், தூத்துக்குடி மாவட்ட தலைவர் கிருஷ்ணன், கரூர் மாவட்ட தலைவர் ரமேஷ், மதுரை மாவட்ட தலைவர் சக்தி, கரூர் மாவட்ட மகளிரணி தலைவர்.அபிராமி, கன்னியாகுமரி மாவட்ட தலைவர் சரவணன், கார்த்திக் மற்றும் ராஷ்ட்ரிய சனாதன சேவா சங்கம் மாநில பொதுச் செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள் .

இந்த கூட்டத்தில் திருச்சி மாவட்ட தலைவராக.மகேஷ் புதிதாக நியமிக்கப்பட்டார்.

மாவட்ட தலைவர்கள் அனைவரும் பிராமணர்கள் அனைவரும் சமுதாயத்தைக் காக்க வீதியில் நின்று போராட தயாராக வேண்டும் நமக்கு கிறிஸ்தவர்கள் எதிரிகள் இல்லை முஸ்லிம் மக்கள் எண்ணிக்கை அதிகமானால் நமக்கு பிரச்சனை தான் . முஸ்லிம்களுக்கு வயிற்றில் அடிக்க வேண்டும் என்றால் அவர்கள் கடைகளில் எந்த பொருளும் வாங்கக் கூடாது. அனைவரும் தேசத்தை நேசிக்க நாட்டுப்பற்று  வளரும் என்று பேசினார்கள்.

அகில பாரத மக்கள் கட்சி நிறுவனர் ராமநாதன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய போது:

சுப்பிரமணியசாமி அவர்களிடம் எங்களுடைய பிரதிநிதிகள் பேசியுள்ளார்கள், தமிழ்நாட்டில் உள்ள இந்து அறநிலைத்துறை செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடைபெற்று உள்ளது.

மேலும் இப்பொழுது உள்ள தமிழக அரசின் இந்து விரோத அரசாக உள்ளது. கிறிஸ்தவர்களுக்கும். முஸ்லீம்களுக்கும் நிகழ்ச்சி,விழா நடத்த அனுமதி கொடுக்கிறார்கள். இதே நேரத்தில் விநாயகர் ஊர்வலத்திற்கு தடை செய்துள்ளார்கள். இதையெல்லாம் கருத்தில் கொண்டு அனைத்து இந்து இயக்கங்களும் ஒன்று சேர்ந்த மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்.

இந்து அறநிலைத்துறை செயல்பாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அறநிலைதுறையில் புதிதாக பணியில் அமர்த்தப்பட்டவர்கள் கட்சிக்காரர்கள் மட்டும்தான். தமிழகத்தில் இந்து விரோத கட்சிகளுக்கு எங்களுடைய கட்சி ஆதரவு இல்லை என்று பேசினார்

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட இந்து தமிழர் கட்சி நிறுவனர் ராம ரவிக்குமார் பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது பேசியபோது:

புரட்டாசி மாத சனிக்கிழமைகள் இந்துக்களுக்கு மிகவும் முக்கியமான நாள் ஆகும். ஆனால் அனைத்து பெருமாள் கோயில்களும் முடி உள்ள நிலையில் சாராயக்கடைகள் மட்டும் திறக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து நாட்களிலும் திருக்கோயில்கள் திறந்து வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம்,

தமிழகத்தில் பிரிவினைவாதம் ஒழிய சமத்துவபுரம் மற்றும் அனைத்து இடங்களிலும் வைக்கப்பட்டுள்ள இந்து விரோதி ஈவேராவின் சிலையை அகற்றிவிட்டு அந்த இடங்களில் ராமானுஜர், வள்ளுவர் அவர்களுடைய சிலையை நிறுவ வேண்டும்.

புதிதாக நியமிக்கப்பட்ட கவர்னர் இரவி முன்னாள் காவல்துறை உயரதிகாரி என அவர் பதவி ஏற்கும் முன்பே எதிர்ப்பு தெரிவிக்கும் திருமாவளவன், கே.எஸ்.அழகிரி. இவர்கள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.. திருடனுக்கு தான்காவல்துறை அதிகாரியை கண்டால் அச்சம் ஏற்படும்.

பஞ்சாபின் கவர்னராக பன்வாரிலால் புரோகித் பதவியேற்றவுடன் பஞ்சாப் முதல்வர் ராஜினாமா செய்து உள்ளார்.அதே செய்தி தமிழ்நாட்டிலும் வரும். தமிழகத்தில் இந்து ஓட்டுவங்கி உருவாகிக்கொண்டிருக்கிறது என்று பேசினார்.

இந்த கூட்டத்தில் அகில பாரத மக்கள் கட்சி நிறுவனர் ராமநாதன் பேசும்பொழுது :

வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் நிற்பதற்கு நாம் அனைவரும் தயாராக வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் நமது கட்சி கொடியை ஏற்ற வேண்டும், நாம் யாருடன் கூட்டணி என்பதை பிறகு அறிவிக்கப்படும். நாகை திருவாரூர் மாவட்டங்களில் நிறைய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். அனைத்து இந்து மக்கள் ஒருங்கிணைக்கும் வகையில் நமது கட்சியின் சார்பில் ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேவை அனைத்து இந்துக்களும் பயன்படும் வகையில் தொடங்கி உள்ளோம் என்று பேசினார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.