திருச்சி மலைக்கோட்டை பகுதியில்
கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இனிகோ இருதயராஜ் ஆய்வு.

திருச்சி மலைக்கோட்டை பகுதி 10வது வார்டுக்கு உட்பட்ட
ஆண்டாள் வீதி, பட்டவர்த்ரோடு, பாறையடி தெரு, காளியம்மன் கோவில் தெரு ஆகியவற்றில் கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இனிகோ இருதயராஜ் ஆய்வை மேற்கொண்டார்.
அப்போது பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். குடிநீர் வசதி, கழிவுநீர் வசதி, தெருவிளக்குகள் சரியாக பராமரிக்கப்படுகிறதா என்பதை பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.

எரியாத மின்விளக்குகளை உடனடியாக மாற்ற மின்வாரிய ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்.
மழை காலம் என்பதால் கழிவுநீர் அடைப்பை சரி செய்ய வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது பகுதி செயலாளர் மதிவாணன், வட்ட செயலாளர் சங்கர், நிர்வாகிகள் முத்தழகு பழனி, சிவகுமார்,அண்ணாசாலை விக்டர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

