இவலச மருத்துவ முகாம்.
திருச்சியில் பி.எம்.சி. மெடிக்கல் சென்டர் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
திருச்சி, ராம்ஜிநகர், ஹரிபாஸ்கர் காலனியில் அமைந்துள்ள பி.எம்.சி மெடிக்கல் சென்டரில் நடைபெற்ற இந்த முகாமிற்கு ஏ.கே. மணிமாறன் தலைமை வகித்தார்.
முகாமில் ரத்த அழுத்த சோதனை, சர்க்கரை நோய் பரிசோதனை உள்ளிட்டவற்றுடன் அனைத்து விதமான வியாதிகளுக்கும், மருத்துவர்களைக் கொண்டு மருத்துவ ஆலோசனையுடன் மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன.
முகாமிற்கான ஏற்பாடுகளை பி எம் சி மேடிக்கல் சென்டர் நிர்வாகிகள் மு. மோகனசுந்தரம், மோ. பாரதி ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
காலை 9 முதல் பகல் 1 மணி வரை நடைபெற்ற இம்முகாமில் மொத்தம் 100 மேற்பட்டோர் பயனடைந்தனர்.