மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து இந்தியா முழுவதும் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கட்சியினர் அவர்களது வீட்டின் முன்பு
மத்திய அரசின் பெட்ரோல் டீசல் விலை உயர்வு, 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகளுக்கு ஆதரவாக பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்க்காதே என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி
சோனியா காந்தியின் உத்தரவுப்படி மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி செயல் தலைவர் டாக்டர் எம்.கே.விஷ்ணு பிரசாத் ஆகியோரின் ஆணைக்கிணங்க இன்று
ஸ்ரீரங்கத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம்.சரவணனின் இல்லத்தின் முன் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட துணைத்தலைவர் முரளி, கோட்டத் தலைவர் சிவாஜி சண்முகம், பொதுச் செயலாளர்கள் அண்ணா சிலை விக்டர், பஜார் மைதீன், திம்மை செந்தில்குமார், நிர்மல் குமார்,வார்டு தலைவர் சக்தி, முருகன் , தியாகராஜன், பாதையாத்திரை நடராஜன், செல்வி, குமரன், கிருஷ்ணமூர்த்தி, கதர் ஜெகநாதன் நொச்சியம் வெங்கடேஷ், மன்சூர் குத்தூஸ் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டு மத்திய அரசை கண்டித்து முழக்கமிட்டனர்.