
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் பெரியாரின் 143வது பிறந்த தினத்தை முன்னிட்டு

திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள ஆர்.சி.ஆதிமூலம் பள்ளியில்

தமிழக வாழ்வுரிமை கட்சியின் 142 பேர் ரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த முகாமினை திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இனிகோ இருதயராஜ் தொடங்கிவைத்தார்.

நிகழ்ச்சிக்கு வாழ்வுரிமை கட்சியின் மாநகர் மாவட்ட மாணவரணி செயலாளர் சரண் தலைமை தாங்கினார்.

மாநகர் மாவட்ட செயலாளர் ராயல் ராஜா,
மாவட்ட தலைவர் முரளி, பொருளாளர் பொன்னுசாமி, துணைத்தலைவர் ரஞ்சித் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் மாவட்ட துணைச்செயலாளர் முருகதாஸ், இளைஞரணி செயலாளர் பாரத், இளைஞரணி தலைவர் நாகராஜன், உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

முன்னதாக இரத்ததானம் முகாமினை தொடங்க வருகை வந்த சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜிக்கு பெரியார் எழுதிய ‘பெண் ஏன் அடிமையானாள்’ என்ற புத்தகத்தை தமிழக வாழ்வுரிமை கட்சியினர் பரிசாக வழங்கினர்.

