13 பேருக்கு பட்டதாரி ஆசிரியராக பணியிட மாறுதல் ஆணை வழங்கி பாராட்டினார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி
வட்டாரவள மைய பயிற்றுநராக பணிபுரிந்த 13 பேருக்கு பட்டதாரி ஆசிரியராக பணியிட மாறுதல் ஆணை வழங்கி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்திய மூர்த்தி பாராட்டு.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வட்டார வள மையங்களில் பணிபுரிந்து வந்த ஆசிரியர் பயிற்றுநர்கள் 13 பேருக்கு பட்டதாரி ஆசிரியராக பணியிட மாறுதல் ஆணைகள் வழங்கும் நிகழ்வு புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி கலந்து கொண்டு வட்டார வளமைய பயிற்றுநராக பணிபுரிந்த 13 பேருக்கு பட்டதாரி ஆசிரியராக பணியிட மாறுதல் ஆணைகளை வழங்கிப் பாராட்டினார்.
பின்னர் அனைவரிடமும் தாங்கள் தேர்ந்தெடுத்துள்ள பள்ளிகளில் உடனடியாக சேர்ந்து சிறப்பாக பணியாற்ற வேண்டும் என கூறினார்.
நிகழ்வின் பொழுது புதுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் கே.எஸ்.இராஜேந்திரன் ,ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் இரவிச்சந்திரன், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனிவேல்,மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் கபிலன்( உயர்நிலை) ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக பணிமூப்பு அடிப்படையில் மூத்த ஆசிரிய பயிற்றுநராக பணிபுரிந்து பட்டதாரி ஆசிரியராக பணியிட மாறுதல் பெற்ற 13 பேரும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரை சந்தித்து வாழ்த்து பெற்றனர் .