திருவெரும்பூர் தொகுதியில் தியாகி இம்மானுவேல் சேகரனாருக்கு முழுஉருவச் சிலை அமைக்க
உதயநிதி ஸ்டாலினிடம் வக்கீல் பொன். முருகேசன் கோரிக்கை.
அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகம் சார்பில் புதுக்கோட்டை மெயின் ரோட்டில் உள்ள வி.வி.கிரீஸ் மஹாலில் இமானுவேல் சேகரன் 64-ம் ஆண்டு வீரவணக்க தினம் கடைபிடிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு நிறுவனத் தலைவர் வக்கீல் பொன். முருகேசன் தலைமை தாங்கினார். இதில் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு இமானுவேல் சேகரன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வணங்கினார்.
அப்போது அவருக்கு செங்கோல் நினைவு பரிசாக வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ரகுபதி, மெய்யநாதன், இனிகோ இருதயராஜ் எம்எல்ஏ ,டெல்லி அரசு பிரதிநிதி ஏகே எஸ் விஜயன் ,முன்னாள் எம்எல்ஏக்கள் கே.என். சேகரன், பெரியண்ணன் அரசு, அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழக மாவட்ட செயலாளர்கள் மணிகண்டன் (திருச்சி), சரத் பாண்டியன் (புதுக்கோட்டை), முருகன் (கரூர்), நிக்கல்சன் (நாமக்கல்) சுரேஷ்குமார் (தஞ்சை),தேசிய செயலாளர் துரை.அறிவுக்கரசன், பொருளாளர் பொன் ரங்கராஜ், மாநில இளைஞரணி தலைவர் ஓவியர் ஜெயராஜ், செயலாளர் புதியவன், மாநில செய்தி தொடர்பாளர் வடிவேல்நிர்வாகிகள் கருப்பசாமி ,மேகநாதன், ஜானகி மற்றும் பல்வேறு மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அப்போது உதயநிதி ஸ்டாலினிடம் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-
*திருவெறும்பூரில் சிலை*
இமானுவேல் சேகரன் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும்.
திருவெறும்பூர் தொகுதியில் இமானுவேல்சேகரன் உருவச் சிலை நிறுவ வேண்டும். சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை அறங்காவலர் குழு தலைவராக நியமனம் செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.