Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஆரம்பப் பள்ளிகள் திறப்பது குறித்து 15ம் தேதி மேல் முதல்வர் முடிவு எடுப்பார். திருச்சியில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி.

0

'- Advertisement -

திருச்சி மாநகராட்சி வார்டு 61 வார்டில் 16. 25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நியாய விலை கடையில் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

திருச்சி மாநகராட்சி 61வது வார்டுக்கு உட்பட்ட திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் காவேரி நகர் பகுதியில் 2020 மற்றும் 21 வது நிதி ஆண்டில் தனது தொகுதி வளர்ச்சி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய்16 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நியாய விலை கடை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது

தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் பேசும் பொழுது இது என்னோட அரசு அல்ல நமது அரசு என்று கூறினார் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரும் போது அனைத்துக் கட்சியினரும் ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அதற்கு தமிழக பாஜக உட்பட அனைத்து கட்சிகளும் ஒருமித்த கருத்தாக நீட் தேர்வு ரத்து செய்ய சொல்லி பேசியுள்ளதாக கூறினார்

இன்று நடக்கும் நீட் தேர்வு தமிழகத்தில் கடைசி நீட் தேர்வாக இருக்குமா என்று கேட்டதற்கு

நீட் தேர்வு எதிர்த்து போராடுகிறோம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்போடு வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை தமிழக முதல்வருக்கும் உள்ளது.


தமிழ்நாட்டில் ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகள் திறப்பது குறித்து கேட்டதற்கு

தமிழ்நாட்டில் உள்ள தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளை திறப்பது குறித்து வரும் 15ஆம் தேதி அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதன் பிறகு பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் முடிவெடுப்பார்.

புத்தாக்க பயிற்சி குறித்து கேட்டதற்கு

40 முதல் 45 நாட்களுக்கு மாணவ மாணவிகளை பள்ளிக்கு வரவைப்பது அதன் பிறகுதான் முறையான வகுப்புகள் நடைபெறும் கூறினார்.

பின்னர் காட்டூர் பிலோமினாள் பள்ளி யில் நடந்த கொரொனா தடுப்பூசி முகாமை அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்

இந்த விழாவில் திருச்சி கலெக்டர் சிவராசு, முன்னாள் எம்எல்ஏ சேகரன், காட்டூர் பகுதி செயலாளர் நீலமேகம், திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கருணாநிதி, , திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள்உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.