சென்னையை சோர்ந்த பெணகள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு சர்வதேச நீதி குழுமம் தமிழக காவல்துறை மற்றும் திருச்சியை சேர்ந்த wdps அமைப்பின் சார்பில் திருச்சி மாவட்டம் நடராஜபுரம் அரசகுடி மற்றும் தஞ்சை மாவட்டம் கல்லணை பகுதியில் கடந்த 3 தினஙகளாக பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு குறும்படம் (தலைப்பு கேடயம்) படப்பிடிப்பு நடைபெற்றது .
சென்னையில் இருந்து கேடயம் குறும்படத்தின் இயக்குனர் சிவகுமார் அவர்கள் தலைமையில் படப்பிடிப்பு குழுவினர் தொழில்நுட்ப குழுவினர் திருச்சிக்கு வந்திருந்து படப்பிடிப்பை நடத்தினர்.
இப்படப்பிடிப்பு wdps நிர்வாக இயக்குனர் சீதாலட்சுமி மேர்பார்வையில் நடைபெற்றது.

இக்குறும்படத்தில் திருவெறும்பூர் AWPS & L & 0 காவல்துறையை சேர்ந்த உதவி ஆய்வாளர் ,பெண் காவலர்கள் நாடக நடிகர்கள் மோகன்தாஸ் , வின்சன்ட், பொன்.இளங்கோ, சீதாலட்சுமி,
மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் நடிகருமான ஆர்.ஏ.தாமஸ் ஹேமா ஜான்சிராணி அனிலா நவின் மிருளா, ரோஷன் முத்துபாண்டி மற்றும் கிராம மக்கள் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இப்படபிடிப்பு சிறப்பாக நடைபெற காவல்துறை பாதுகாப்பு அளித்து குறும்படத்தில் காவல்ர்களை பங்கேற்க செய்த திறுவெறும்பூர் DSP சுரேஷ் அவர்களுக்கும் நடராஜபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சத்யகீதா தாஸ் கிருஷ்ணசமூத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் ரம்யா மற்றும் ஊர் பொதுமக்களுக்கும் படகுழுவினர் சார்பில் நன்றியை தெரிவித்து கொண்டனர்.