Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தாசில்தார் தாக்கப்பட்ட சம்பவம்.நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகம் முழுவதும் போராட்டம். வருவாய்த்துறை அலுவலர் சங்கம் முடிவு.

0

*மணப்பாறையில் தாசில்தார் தாக்கப்பட்ட சம்பவம்*
*நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகம் முழுவதும் போராட்டம்*
*வருவாய்த்துறை அலுவலர் சங்கம் அறிவிப்பு*

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நகர நிலவரித் திட்ட தனி தாசில்தார் ஆக பணிபுரிந்து வருபவர் பாத்திமா சகாயராஜ்.

இவர் நேற்று பணியில் இருந்தபோது தி.மு.க. பிரமுகரால் தாக்கப்பட்டார் தாக்கப்பட்டதை கண்டித்து மாவட்டம் முழுவதும் வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும் தாக்கிய நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் அவசர ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் இன்று மாவட்ட தலைவர் பிரகாஷ் தலைமையில் நடந்தது.

செயலாளர் கலைச்செல்வன் வரவேற்றார். பொருளாளர் சண்முகவேலன் நன்றி கூறினார்.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட துணை தலைவர் கார்த்திகேயன் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


கூட்ட முடிவில், மணப்பாறையில் தாசில்தார் தாக்கப்பட்ட சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துவது.

தாக்குதல் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தது உள்ளிட்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

Leave A Reply

Your email address will not be published.