விநாயகர் சதுர்த்தி கொண்டாட தடை விதித்தால் உண்ணாவிரதம். திருச்சியில் அகில இந்திய இந்து மகாசபா முடிவு.
திருச்சியில் அகில இந்திய இந்து மகாசபா மாவட்ட தலைவர் மணிகண்டன் ஜி தலைமையில் நடைபெற்ற அவசர கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் கீழ்வருமாறு:
1.அகில இந்திய இந்து மகாசபா தலைமை அலுவலகம் அருகில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் உருவ சிலை வைத்து வழிபடுவது
2.விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட விடாமல் இந்துக்கள் மனதை புண்படுத்தும் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்வது.
3.விநாயகர் சதூர்த்தி விழாவை கொண்டாட அனுமதிக்காவிட்டால் திருச்சியில் அகில இந்திய இந்து மகாசபா சார்பில் தமிழக அரசை கண்டித்து கண்டன பாதகைகளுடன் ஓர் நாள் அடையாள உண்ணாவிரதம் இருக்கு முடிவு .(இடம், தேதி பின்னர் அறிவிக்கப்படும்)
4.திருச்சி மேலப்புதூரில் தமிழக அரசு அறிவித்த கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி நடைபெற உள்ள ஆயர் பதவியேற்புக்கு தடை விதிக்க வேண்டும் என அகில இந்திய இந்து மகாசபா சார்பில் காவல் துறை ஆணையரிடம் மனு அளித்தும் 700 பேர் கூடி நடைபெற்ற அந்த பதவியேற்பு விழாவிற்கு போலீஸ் பாதுகாப்பு அளித்தது.மாற்று மதத்தினருக்கு ஒரு சட்டம் இந்து மதத்திற்கு ஒரு சட்டமா?
5.எனவே தமிழக அரசு உடனடியாக விநாயகர் சதுர்த்தி விழாவை தமிழகத்தில் வெகு விமர்சையாக கொண்டாட அனுமதி அளிக்க வேண்டும் என அகில இந்திய இந்து மகாசபா சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.