திருச்சி சோமரசம்பேட்டை, அல்லித்துறை பகுதிகளில் கொடிகட்டி பறக்கும் பெண் கஞ்சா வியாபாரி.நடவடிக்கை எடுக்குமா காவல்துறை ?
திருச்சி சோமரசம்பேட்டையில் கொடி கட்டி பறக்கும் கஞ்சா விற்பனை.
திருச்சியில் கஞ்சா விற்பனையை தடை செய்ய காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கஞ்சா விற்பவர்களை கைது செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் சோமரசம்பேட்டை காவல் நிலையம் உள்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை படுஜோராக நடைபெறுகிறதாம்.
சோமரசம்பேட்டை பஞ்சாயத்து அலுவலகம் அருகே உள்ள வெங்கடேஸ்வரா முட்டை கடையில் ஜெயந்தி என்ற பெண்மணி ( இந்தப் பெண்மணியின் வீடு சோமரசம்பேட்டை காவல் நிலையம் அருகில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது) தைரியமாக தடைசெய்யப்பட்ட ஹான்ஸ், பான்பராக் உடன் கஞ்சாவும் விற்பனை செய்து வருகிறாராம்.
அல்லித்துறையில் மாரியம்மன் கோயில்நாலுகால் மண்டபம் மற்றும் ஈஸ்வரன் கோயில் பகுதியிலுள்ள கருமாதி செய்யும் இடங்களில் இவரிடமிருந்து மொத்தமாக வாங்கிச் சென்று கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெறுகிறதாம்
இதனால் சோமரசம்பேட்டை. அல்லித்துறை பகுதியில் உள்ள 12,13 வயது மாணவர்கள் மற்றும் இளைஞர்கள்ம துபானங்கள் விலை அதிகமாக உள்ளதால் இந்த கஞ்சாவுக்கு அடிமையாகி வருகின்றனர்.
இதனால் இவர்களின் எதிர்காலம் பாழாய்ப் போகும் நிலையில் உள்ளது.
கஞ்சா போதையில் அடிதடி சம்பவங்களும் இப்பகுதியில் அடிக்கடி நடந்தேறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உடனடியாக காவல்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என இப்பகுதி பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்ப்பு.