Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் பல்வேறு இடங்களில் அகவிலைப்படி கேட்டு மின்வாரிய தொழிற்சங்கத்தினர் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்.

0

அகவிலைப்படி கேட்டு
மின்வாரிய தொழிற்சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.


மின்வாரிய ஊழியர்களுக்கு 1.7.2021 முதல் வழங்கவேண்டிய அகவிலைப்படியை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும்.

அகவிலைப்படி அடுத்த ஆண்டு வழங்கப்படும் என்று சட்டசபையில் வெளியிடப்பட்ட அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி

சிஐடியு, டிபிஏஎஸ், டி என்இபி இஎப், ஏடிபி, பொறியாளர் சங்கம், பொறியாளர் கழகம், தொழிலாளர் சம்மேளனம்,
ஐஎன்டியூசி, ஏஇஎஸ்யூ ஆகிய மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் இன்று தென்னூரில் உள்ள மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன்

 

சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதேபோல் ஸ்ரீரங்கம், மன்னார்புரம், லால்குடி, தா.பேட்டை, முசிறி, மண்ணச்சநல்லூர், துறையூர், மணப்பாறை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இடங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Leave A Reply

Your email address will not be published.