டிரைவர்கள் இடையே நடந்த சண்டையில் காவல்துறை வாகனத்தில் இருசக்கர வாகனம் மோதியது.
திருச்சி பொன்மலை பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியை TN 02 AX 7441 வேலூர் மாவட்டத்தை சேர்ந்த குமரேசன் (வயது 44) இயக்கி கொண்டு வந்த நிலையில்,
சேலம் மாவட்டம் ஆத்தூர் வீரகனூர் பகுதியை சேர்ந்த இளைஞர் ராஜ்குமார் டேங்கர் லாரியை (TN 54 J 4318) கொண்டு ஜி கார்னர் பகுதியில் கண்டெய்னர் லாரியை மறித்து டிரைவர் குமரேசனை சரமாரியாக அடித்து தாக்கியுள்ளார்.
அக்கம்பக்கத்தில் இருந்த பொதுமக்கள் அனைவரும் பார்த்தவுடன் அவரை தடுத்து நிறுத்தி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை செய்த பொழுது டேங்கர் லாரி டிரைவர் ராஜ்குமார் எனது லாரியில் உள்ள சைடு மிரர் கண்ணாடியை இடித்து உடைத்ததால் கோபத்தில் அடித்து விட்டேன் எனக் கூறினார்.
ஆனால் காவல்துறையினர் சென்று டேங்கர் லாரியின் கண்ணாடியை பார்த்தபொழுது இடித்ததற்கான எந்த தடயமும் இல்லாமல் கண்ணாடி உடையாமல் இருப்பதை கண்டு காவல்துறையினர் டேங்கர் லாரி டிரைவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது லால்குடியைச் சேர்ந்த பிரேம் என்ற இளைஞர் குடிபோதையில் யமஹா TN 48 AV4125 இருசக்கர வாகனத்தை கண்ட்ரோல் இல்லாமல் வேகமாக வந்ததால் காவல்துறையினர் வாகனத்தில் மோதியது,
இந்த விபத்தில் காவல்துறை வாகனத்தின் பின்புறம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
லாரி டிரைவர் குமரேசனை முதலுதவி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் டேங்கர் லாரி டிரைவர் ராஜ்குமாரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.