டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா அபாரமான திறமையை வெளிப்படுத்தினார்.
23 வயதான நீரஜ்சோப்ரா தகுதி சுற்றில் 86.65 மீட்டர் தூரம் எறிந்து, இறுதிப் போட்டிக்கு முனனேறினார்.
இன்று இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் நீரஜ் சோப்ரா துவக்கம் முதலே சிறப்பான இலக்கை பதிவு செய்து முதலிடத்தில் இருந்தார். அடுத்தடுத்த சுற்றுகளிலும் அவரே முன்னிலை பெற்றார். ஜெர்மனி வீரர் வெபர், செக் குடியரசு வீரர்கள் வெஸ்லி, வத்லெஜ், பாகிஸ்தான் வீரர் நதீம் ஆகியோர் நீரஜை பின் தொடர்ந்தனர்.
ஆனால் அவர்களின் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை.
6 சுற்றுகளின் முடிவில், நீரஜ் சோப்ரா முதலிடத்தை பிடித்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.
அவர் அதிகபட்ச தூரமாக 87.58 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து அசத்தினார்.
தங்கமகன் நீரஜ் சோப்ரா அரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர். இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.
ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் விளையாட்டு, ஆசிய சாம்பியன்ஷிப், தெற்காசிய விளையாட்டு, உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் ஆகிய முக்கியத்துவம் வாய்ந்த போட்டிகளில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா,
முதல் முறையாக ஒலிம்பிக்கில் தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
இதன்மூலம் டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம் கிடைத்துள்ளது. மொத்த பதக்க எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
இந்த தங்கம் பதக்கம் தடகளத்தில் வரலாற்று சாதனை ஆகும்.
ஒலிம்பிக்கில் இந்தியா கடைசியாக 2008ம் ஆண்டு துப்பாக்கி சுடுதலில் அபினவ் பிந்த்ரா தங்கம் வென்று இருந்தார்.
13 ஆண்டுக்கு பின் மீண்டும் தங்கம் கிடைத்து உள்ளது.
ஒர் தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என இந்தியா பதக்க பட்டியலில் 47வது இடத்தை பிடித்துள்ளது .
தற்போது பிரதமர், ஜனாதிபதி,அனைத்து மாநில முதல்வர்கள்,ராணுவத்தினர் மற்றும் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்தியா முழுவதும் தங்க மகன் நீரஜ் சோப்ராவின் வெற்றியை இனிப்பு வழங்கிகொண்டாடி வருகின்றனர்