கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்க்கும் மாணவர்களின் வீடு தேடிச் சென்று பரிசு வழங்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்.
கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்க்கும் மாணவர்களின் வீடு தேடிச் சென்று பரிசு வழங்கி வரும் அரசுப்பள்ளி ஆசிரியர்களை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ,குன்றாண்டார்கோவில் ஊராட்சியில் லெக்கணாப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது.
இப்பள்ளியில் கொரானா பெரும் தொற்று காரணமாக பள்ளி வந்து படிக்க முடியாத மாணவர்களுக்கு பல வசதிகளை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார்கள் இப்பள்ளி ஆசிரியர்கள்.
இது குறித்து தலைமையாசிரியர் ஆண்டனி கூறியதாவது;இப்பள்ளி மாணவர்கள் பெரும்பாலும் பின்தங்கிய பகுதியில் இருந்து வருகிறார்கள்.
இவர்களில் பெரும்பாலானோ
முதல் தலைமுறையாக
பள்ளியில் படிப்பவர்கள் ஆவார்கள்.எனவே இம்மாணவர்கள்
படிப்பில் ஆர்வம் காட்டுவதற்காகவும் , இடைநிற்றல் தவிர்ப்பதற்காகவும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.
மாணவர்கள் எளிதாக படிப்பதற்காக பாடங்களைப் வீடியோவாக தயாரித்து அதனை வாட்ஸ்அப் மூலம் அனுப்புகிறோம். தினந்தோறும் ஆசிரியர்கள் மாணவர்களின் பெற்றோரிடம் தொடர்புகொண்டு மாணவர்களின் நிலைமை அறிந்து கொள்கிறார்கள். மேலும் அவர்களை படிப்பதற்கு ஊக்கப்படுத்துகிறார்கள். தினந்தோறும் ஆசிரியர் கொடுக்கும் ஒப்படைவுகளை மாணவர்கள் எழுதிப் பெற்றோர் மூலம் பள்ளியில் ஒப்படைக்கிறார்கள். இதற்காக ஒரு தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் மாணவர்கள் நலனில் நமது தமிழக அரசு எடுத்து வரும் முயற்சிக்கு துணையாக மாணவர்களை ஊக்கப்படுத்துவதற்கு கல்வி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் பாடங்களை தினமும் தவறாமல் பார்த்து பயன் பெறும் மாணவர்களை ஊக்கப்படுத்தவும், ஆசிரியர்களால் வாட்ஸ் அப் மூலம் அனுப்பப்படும் அனைத்து ஒப்படைவுகளை அதிக அளவில் ஒழுங்காகவும் ,சரியாகவும், சமர்ப்பித்த மாணவ, மாணவியர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும் நான் மற்றும் ஆசிரியர்கள் அலுவலக பணியாளர்கள் மாணவர்களின் வீடுகளுக்கே சென்று பெற்றோர்கள் முன்னிலையில் பரிசுகள் வழங்கிப் பாராட்டுகிறோம். இதனால் பெற்றோர்களும் மாணவர்களும் மகிழ்ச்சியடைகிறார்கள்.
இதனால் மாணவர்களுக்கும் தாங்கள் பரிசுகள் பெற வேண்டும் எண்ணம் தானாகவே உருவாகிறது என்றார்.