கிளிக்குடி அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திடீர் ஆய்வு.
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி மாவட்டம், மருங்காபுரி ஒன்றியம், ஊனையூர் பஞ்சாயத்திற்குட்பட்ட புத்தக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு புதியதாக கட்டப்பட்ட கட்டிடத்திறப்பு விழாவிற்கு செல்லும் வழியில் புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் கல்வி மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம், கிளிக்குடி அரசு உயர்நிலைப்பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையாசியரிடம் பள்ளியின் தேவைகள் குறித்தும்,மாணவர்களின் எண்ணிக்கை குறித்தும் கேட்டறிந்தார்.
ஆய்விற்கு வந்திருந்த அமைச்சர் அவர்களை இலுப்பூர் மாவட்டக்கல்வி அலுவலர் ப.சண்முகநாதன், பள்ளித்துணை ஆய்வாளர் கி.வேலுச்சாமி, பள்ளியின் தலைமையாசிரியை கலைச்செல்வி ஆகியோர் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர்.
ஆய்வின் போது மருங்காபுரி சட்டமன்ற உறுப்பினர் அப்துல்சமது, அன்னவாசல் தெற்கு ஒன்றிய தி்.மு.க செயலாளர் கே.எஸ்.சந்திரன், மருங்காபுரி வடக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் செல்வராஜ், அன்னவாசல் தி.மு.க நகரச் செயலாளர் அக்பர் அலி,கிளிக்குடி ஊராட்சித் தலைவர் முத்துச்செல்வன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் முத்தையா ஆகியோர் உடன் இருந்தனர்.
முன்னதாக கிளிக்குடி அரசு உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டி ஊராட்சித்தலைவர் அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தார்.