32-வது ஒலிம்பிக் திருவிழா ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது.
இதில் 7வது நாளான இன்று டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் டென்மார்க் வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து.
டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் 16 வது சுற்றில் பி.வி.சிந்து டென்மார்க்கின் மியா பிளிச்ஃபெல்ட்டை 21-15, 21-13 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.