முன்னாள் அமைச்சரும், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளருமான மு.பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள
அறிக்கையில்
அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் துணை முதல்வருமான ஒ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி K. பழனிச்சாமி ஆகியோர்களின் வழிகாட்டுதளின்படி,
நீட் தேர்வு ரத்து செய்யாமல் மாணவர்களை வஞ்சிப்பது,
ஆட்சி அமைந்தவுடன் பெட்ரோல் விலை ரூ.5/-ம் டீசல் விலை ரூ.4/-ம் குறைப்பதாகவும்,
சமையல் எரிவாயு சிலிண்டரருக்கு ரூ.100/- மானியம் வழங்குவதாக கூறியது உள்ளிட்ட இந்த தேர்தல் வாக்குறுதியையும் நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து நாளை 28ம் தேதி காலை 10.00 மணி அளவில் திருச்சி புறநகர் அதிமுக வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட மாநகராட்சி, நகராட்சி, ஒன்றியம் பேரூராட்சி ஊராட்சி பகுதிகளில் உள்ள கழக நிர்வாகிகள் செயல்வீரர்கள் வீராங்கனைகள் தொண்டர்கள் அனைவரும் தங்கள் வீடுகளின் முன்னே பதாகைகளை ஏந்தி கவன ஈர்ப்பு முழக்கங்களை எழுப்பி ஆர்பாட்டம் செய்ய வேண்டும்
என திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மு.பரஞ்ஜோதி தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்..