பொதுமக்களின் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். திருச்சி கிழக்கு தொகுதிக்கு எதுவும் செய்யாத எம்.எல்.எ. டுவிட். பொதுமக்கள் நகைப்பு
நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் அவர்கள் தலைமையில்
திருச்சி, தஞ்சாவூர்,புதுக்கோட்டை, அரியலூர் ,பெரம்பலூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், .
பேரூராட்சிகள் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ஆகிய துறைகளில் தற்போதைய வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நாளை ஜூலை 25 திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.
இக் கூட்டத்தில் திருச்சி மாநகரின் வளர்ச்சி, தேவைகள் குறித்த கோரிக்கைகளை முன்வைக்க உள்ளதாகவும் திருச்சி மாநகர வளர்ச்சிக்கு பொதுமக்கள் கருத்துக்களை எதிர் நோக்குகிறேன் எனவும்.
வாருங்கள் அனைவரும் இணைந்து சீர்மிகு திருச்சியை கட்டமைப்போம். என இனிக்கோ இருதயராஜ் இன்று தனது ட்விட்டரில் ட்வீட் செய்துள்ளார்.
திருச்சி கிழக்கு தொகுதி பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை நேரடியாக எம்எல்ஏவின் வாட்ஸப் நம்பருக்கு நேரடியாக அனுப்பியும் எந்த நடவடிக்கை எடுக்காத எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் ஆவார்.
5 துறை அமைச்சர்கள் மற்றும் பல தொகுதி எம் எல் ஏக்களும் கலந்து கொள்ளும் இந்த ஆய்வு கூட்டத்தில் பொதுமக்களின் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்வேன் என இனிகோ இருதயராஜ் டுவிட்டரில் பதிவிட்டு இருப்பது உள்ளது திருச்சி கிழக்கு தொகுதி பொதுமக்களிடம் நகைப்பை ஏற்படுத்தி உள்ளது.