Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி போலி சாமியாருடன் வழக்கறிஞர் மற்றும் ரவுடி கைது

0

இந்த நிலையில் தேஜஸ் சுவாமிகள் என்ற பாலசுப்பிரமணியன்,

வழக்கறிஞர் ஒருவருடன் பேசும் ஆடியோ சில நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் வைரலானது.

அதில் ”உயர் போலீஸ் அதிகாரிகள் எல்லாம் நமக்கு தெரிந்தவர்கள்தான். தமிழ்நாட்டில் 42 ரவுடிகள் என்கவுண்ட்டர் லிஸ்ட்டில் இருக்கின்றனர். இதில் டெல்டா மாவட்டங்களை சேர்ந்த ரவுடிகள் மட்டும் 12 பேர். திருச்சியைச் சேர்ந்த ரவுடிகள் சிலர் என்னை வந்து பார்த்து சென்றனர். உங்களுக்கு தெரிந்த ரவுடியை பத்திரமாக இருக்க சொல்லுங்கள்” என்று அந்த ஆடியோ உள்ளது

இதேபோல் தேஜஸ் சுவாமிகள் வக்கீலுடன் பேசிய வேறு ஒரு ஆடியோவில், சைரன் வைத்த காரில் அமைச்சர் சேகர்பாபுவை போய் சந்தித்தாகவும், தமிழக முதலமைச்சர் வீட்டிற்கு நேரில் சென்று வந்ததாகவும் அமைச்சர்கள் பலரும் தன்னிடம் ஜோசியம் கேட்பதற்காக வந்து செல்வதாகவும் கூறி இருக்கிறார்.

இதனை தொடர்ந்து போலீசார் விரைந்து சென்று தேஜஸ் சுவாமிகள் என்ற பாலசுப்பிரமணியனிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

அவருடன் பேசிய கார்த்திக் என்ற வழக்கறிஞர் இடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

பொன்மலை காவல் நிலையத்தில் வைத்து இருவரிடமும் துருவித்துருவி விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையைத் தொடர்ந்து தொடர்ந்து இருவரையும் கைது செய்தனர். மேலும் என்கவுண்ட்டர் பட்டியலில் இருப்பதாக சாமியாரால் கூறப்பட்டு தேடப்பட்டு வந்த கொட்டப்பட்டை சேர்ந்த ரவுடி விஜயகுமார் கொடைக்கானல் இருப்பதை அறிந்த தனிப்படையினர் கொடைக்கானல் சென்று அவரை கைது செய்தனர்.


அவரையும் திருச்சி அழைத்து வந்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் சாமியார் பாலசுப்ரமணியன், வக்கீல் கார்த்திக் மற்றும் ரவுடி விஜயகுமார் ஆகிய 3 மீது பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஆடியோ வெளியிட்டது ஆறு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து

திருச்சி ஜே.எம்.5 நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்திய போலீசார் நீதிமன்ற உத்தரவின்படி வரும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி வரை அவர்களை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.