பல்துறை சாதனையாளர்களுக்கான காமராஜரின் கல்விச் செம்மல் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரியை சேர்ந்த முனைவர். க. தயாளினி.
பெருந்தலைவர் கர்மவீரர் காமராசர் அவர்களின் பிறந்தநாளையொட்டி
பசுமை வாசல் பவுண்டேசன் மற்றும் மனிதநேய மக்கள் அறக்கட்டளை இணைந்து நடத்திய பல்துறை சாதனையாளர்களுக்கான பெருந் தலைவர் கர்மவீரர் காமராசர் விருது நிகழ்ச்சியில், ஆசிரியர் பிரிவில் முனைவர். க. தயாளினி, பேராசிரியர் மற்றும் தலைவர், மின் மற்றும் மின்னணு பொறியியல் துறை, கே.ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரி, திருச்சிராப்பள்ளி
அவர்களின் கல்விச் செயல்பாட்டு சேவையைப் பாராட்டி காமராஜரின் கல்விச் செம்மல் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இவர், ஆசிரியர் ரத்னா விருது, ஐ.எஸ்.டி.இ பெரியார் சிறந்த ஆசிரியர் விருது, மகளிர் சாதனையாளர் விருது, கலாம் விஷன் 2020 விருது, எரிசக்தி சிறப்பு விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றிருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.