Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் தடையை மீறி காங்கிரசார் பேரணி. போலீசாருடன் வாக்குவாதம் கைது

0

பெட்ரோல்.டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து தடையை மீறி சைக்கிள் பேரணி சென்ற காங்கிரஸார் கைது .
திருச்சியில் போலீசுடன் வாக்குவாதம், கைது .


கொரோனாவால் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில்   பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலையை வரலாறு காணாத வகையில்  உயர்த்தி உள்ள

மக்கள் விரோத பாஜக அரசைகண்டித்து  திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் *சைக்கிள் பேரணி மாநகர்மாவட்டதலைவர்.ஜவகர் தலைமையில்_* இன்று   கொரோனா விதிகளுக்கு உட்பட்டு மாவட்ட காங்கிரஸ் அலுவலகமான அருணாசலம் மன்றத்தில் நடைபெற்றது  சைக்கிள் பேரணிமாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜவகர் தலைமையில் அருணாசல மன்றத்திலிருந்து கிளம்பியது மார்க்கெட் பாலக்கரை வழியாக பீம நகரில் முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் சைக்கிள் பேரணி போலீசார் அனுமதி அளிக்கவில்லை இருப்பினும் தடையை மீறி காங்கிரஸார் சைக்கிள் பேரணியை தொடங்கினர் ,

தெப்பக்க்குளம் காந்திசிலை அருகே போலீசார் தடுத்து நிறுத்தி பேரணியாக சென்ற காங்கிரசாரை கைது செய்தனர் .அப்போது போலீசாருக்கும் காங்கிரசுக்கும் இடையே மோதல் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த போராட்டத்தில் மாவட்ட தலைவர் ஜவகர் உள்பட 40 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் போலீசார் அடைத்தனர்.

இந்த போராட்டத்தில் மாவட்ட பொருளாளர் ராஜா நசீர், மாநில பொதுச் செயலாளர்கள் வக்கீல் எம் சரவணன், ஜி கே முரளி, வக்கீல் இளங்கோவன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரெக்ஸ்,

கோட்டத் தலைவர்கள் சிவாஜி சண்முகம். ரவி. ராஜ் மோகன், குழந்தைவேலு ,முத்து, ஓவியர் கஸ்பர் மாவட்ட துணைத்தலைவர்கள் முரளி, சந்தானகிருஷ்ணன், புத்தூர் சார்லஸ், மெய்யநாதன் பட்டதாரி அணி தலைவர் ரியாஸ், கருமண்டபம் பெருமாள், சிறுபான்மை பிரிவு மொய்தீன்,மகளிரணி ஷீலா, பஞ்சாயத்து ராஜ் அணி  அண்ணாதுரை, இளைஞர் காங்கிரஸ் உறையூர்  கிருஷ்ணா, மீனவர் அணி தனபால், சத்தியநாதன், காட்டூர் சக்தி,வார்டு தலைவர்கள் சரவணன்,உறையூர் மனோகர், இளைஞரணி பாலா, உறையூர் ஜெகதீஷ் , சௌந்தர் வடிவேலு, சக்தி, அனந்தபத்மநாபன் பத்மநாபன், வெங்கடேஷ், திலீபன், சுரேஷ்,மலர் வெங்கடேஷ், பாலமுருகன், பாலசுப்பிரமணி, கள்ளத்தெரு குமார், தாராநல்லூர் முருகன், ராஜேந்திரன் ,மகளிரணி அஞ்சு, தாரநல்லூர்மாணிக்கவாசகம்,ரபீக்,முஸ்தபா, ராஜா டேனியல் ராய்,பாலு, மன்சூர் ,அஹமது முஸ்தபா, துணைத் தலைவர் முஸ்தபா, அஸ்கர் ரியாஸ் மலைக்கோட்டை சேகர், அஸ்கர் அலி,இப்ராகிம்   மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.