Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சிலம்பத்தை தேசிய விளையாட்டில் சேர்க்க அமைச்சர் மெய்யநாதன் திருச்சி சிலம்ப குழுவினரிடம் உறுதி

0

'- Advertisement -

சிலம்பத்தில் பல்வேறு சாதனைகள் படைத்த சுகித்தாவுக்கு அமைச்சர் மெய்யநாதன் வாழ்த்து : சிலம்பத்தை தேசிய விளையாட்டில் சேர்க்கவும் உறுதி.

புதுக்கோட்டையில் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் அவர்களிடம் திருச்சி மாவட்ட சிலம்பம் சங்க செயலாளர் மாஸ்டர் கலைச்சுடர்மணி எம்.ஜெயக்குமார், உலக சிலம்ப இளைஞர் சம்மேளனம் தலைவர் மற்றும் இந்திய சிலம்ப கோர்வை தலைவர் இரா.மோகன், சிலம்பத்தில் பல உலக சாதனைகள் மற்றும் சர்வதேச சிலம்ப விளையாட்டு வீராங்கனை மோ.பி.சுகித்தா, பயிற்சியாளர் எம்.சிவராமன் ஆகியோர் நேரில் சந்தித்து திருச்சியில் ஒலிம்பிக் அகாடமி தொடங்க இருப்பது எங்களை போன்று விளையாட்டில் சாதிக்க இருக்கும் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் எனவும்,

மேலும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பத்தையும் தேசிய அளவிலான விளையாட்டுகளில் கொண்டு வந்தால் எங்களை போன்றோர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும் எனவும் அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர்.

கோரிக்கையை கேட்ட அமைச்சர் நிச்சயமாக உங்கள் கோரிக்கையை பரிசீலித்து தேசிய விளையாட்டில் சிலம்பம் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

மேலும் சிலம்பத்தில் 12 வயதிலேயே பல உலக சாதனைகள், தேசிய, சர்வதேச சிலம்ப போட்டிகளில் பங்கேற்று வெற்றிகளை குவித்த திருச்சி மோ.பி.சுகித்தாவை வாழ்த்தி பாராட்டினார்..

உடன் சிங்கப்பூர் மெய்யநாதன், திருச்சி ராஜா ஆகியோர் இருந்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.