Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

டோக்கியோ ஒலிம்பிக் செல்லும் தடகள வீரர்கள், பயிற்சியாளர்களுக்கு திருச்சியில் பாராட்டு

0

தமிழ்நாட்டிலிருந்து ஜப்பான் டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகியுள்ள திருச்சி மற்றும் தமிழ்நாடு தடகள விளையாட்டு வீராங்கனைகளை பதக்கங்களுடன் தாயகம் திரும்ப வாழ்த்தியும், அவர்களுக்கு பயிற்சி கொடுத்த பயிற்சியாளர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.

திருச்சியிலிருந்து டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் தேர்வு செய்யப்பட்ட தடகள வீரர்களின் பயிற்சியாளர்களுக்கு திருச்சி தடகள சங்கம் சார்பில் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் பாராட்டு விழா நடந்தது.

விழாவிற்கு திருச்சி தடகள சங்க செயலாளர் டி.ராஜு தலைமையில்,

பொருளாளர் சி.ரவிசங்கர், மக்கள் சக்தி இயக்க மாநில ஆலோசகர் கே.சி. நீலமேகம் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.

சிறப்பு அழைப்பாளர்கள் காவல்துறை கண்காணிப்பு மற்றும் ஊழல் ஒழிப்பு தமிழ்நாடு மேற்கு (சென்னை) மற்றும் திருச்சி மாவட்ட தடகள சங்க உபதலைவருமான ஏ. மயில்வாகனமும்,

நியூரோ ஒன் மருத்துவமனை இயக்குனர் மருத்துவர் விஜயகுமார் ஆகியோர் திருச்சி மாவட்டத்திலிருந்து ஒலிம்பிக் போட்டியில் கலந்துக் கொள்ள இருக்கும் தடகள வீரர்கள் ஆரோக்கியராஜீவ் பயிற்சியாளர் லால்குடி ராமசந்திரனுக்கும்,
குண்டூர் தனலெட்சுமி சேகரின் பயிற்சியாளர் பொன்மலை மணிகண்டன் ஆறுமுகம் ஆகிய இருவரையும் பாராட்டி பொன்னாடை போர்த்தி கெளவரப்படுத்தினார்கள்.

இவ்நிகழ்வில் திருச்சி மாவட்ட தடகள வீரர்கள் பலரும் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள்.

Leave A Reply

Your email address will not be published.