கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களிலும் கடந்த சில மாதங்களாக பக்தர்களுக்கு அனுமதி
அளிக்கப்படவில்லை.
திருச்சி அம்மா மண்டபம் படித்துறையிலும் பக்தர்களுக்கு அனுமதிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதால் திருச்சி அம்மா மண்டபத்திலும்
பொதுமக்களுக்கு அனுமதி
அளிக்கப்பட்டுள்ளது.
இன்று ஆனி அமாவாசையை முன்னிட்டு பல மாதங்களாக தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுக்க முடியாமல் தவித்து வந்த பொதுமக்கள் இன்று ஏராளமானோர் அம்மா மண்டபம் வந்து தங்கள் முதியோர்களுக்கு திதி அளித்தனர்.
பொதுமக்கள் ஏராளமானோர் கூடியதால் அம்மா மண்டபம் படித்துறை அருகில் திருச்சி மாநகராட்சி சார்பில் இலவச கொரோனா பரிசோதனை முகாமும் நடைபெற்றது.
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பொதுமக்களை சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்றும் முக கவசம் அணிந்து வரும்படியும் அறிவுறுத்தினர்.