பிஷப் ஹீபர் கல்லூரி சில்மிஷ பேராசியரை உடனடியாக கைது செய்யகோரி அ இ இந்து மகா சார்பில் கமிஷனரிடம் புகார்.
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் மாணவிகள் இடம் பாலியல் சீண்டல் மற்றும் அநாகரீகமாக நடந்து கொண்ட பேராசிரியர் பால் சந்திரமோகன் மற்றும் அதற்கு உடந்தையாக செயல்பட்ட துணை பேராசிரியை நளினி சுந்தரி ஆகிய இருவர் மீதும் கல்லூரி மாணவிகளால் குற்றம் சாட்டப்பட்டு மூன்று மாத காலமாக எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் கல்லூரி நிர்வாகமே விசாரணை குழு என்று ஒன்று அமைத்து அவர்களுக்குள்ளாகவே விசாரணை நடத்தி அது உண்மை என்றும் நிரூபணம் செய்யப்பட்டு பால் சந்திரமோகனை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.
இவர்களது விசாரணை எந்த அளவுக்கு நடந்துள்ளது என்றோ? விசாரணைக்குழுவின் அறிக்கை என்ன என்றோ வெளியில் யாருக்கும் தெரியாது.
இவர்களது கல்லூரியில் நடந்த பாலியல் விவகாரத்தினை கல்லூரி நிர்வாகமே ஒரு குழுவினை அமைத்து இறுதி முடிவு எடுக்க என்ன அதிகாரம் உள்ளது? புகார் வந்தவுடன் கல்லூரி நிர்வாகம், காவல்துறையிடமோ அல்லது மகளிர் ஆணையத்திடமோ இதன் மீதான தகவலை தெரிவித்திருக்க வேண்டும்.
ஆனால், அதனை செய்யாமல் யாருக்கும் வெளியில் தெரியாமல் இவர்களே விசாரணை செய்து இவர்களே முடிவெடுத்துக் கொண்டுள்ளனர்.
இதனால் இதில் ஏதோ பல ரகசியங்கள் மறைக்கப்பட்டுள்ளது என்பது தெரியவருகிறது.
குற்றம் சாட்டப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள பால் சந்திரமோகன் ஏற்கெனவே இதே குற்றத்திற்காக இரண்டு முறை கல்லூரி நிர்வாகத்தால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது மூன்றாவது முறை ஆகும். அப்படி இருக்கையில் இவர்களை காப்பாற்ற துடிக்கும் நபர்கள் யார்? இவர்களை காப்பாற்ற துடிக்கும் கல்லூரி நிர்வாகத்தின் பின் இருக்கும் நபர்கள் யார்?
ஒரு குற்றத்தை ஒரு முறை செய்தாலே தண்டனை பெறும் காலத்தில் மூன்றாவது முறையாக ஒருவர் இந்த பாலியல் குற்றத்திற்காக பணி இடை நீக்கம் செய்யப்படுகிறார் என்றால், எந்த தைரியத்தில் அவர் அவ்வாறு செயல்பட்டார்.? இதுவே, ஒரு இந்துக்கல்லூரி நிர்வாகம் என்றால், தவறு செய்தவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து கல்லூரி நிர்வாகத்தினரை விசாரணை என்ற பெயரில் அலைக்கழித்து அவமானப்படுத்தும் செயல்களை ஈடுபடுவார்கள்.
ஆனால், கிறித்துவர்களால் நடத்தப்படும் கல்லூரி என்ற ஒரே காரணத்திற்காக இந்த விவகாரத்தில் மவுனம் கடைபிடிக்கப்படுகிறது. பாதிக்கப்படுவதில் இந்து, முஸ்லீம், கிறித்துவம் என்ற பாகுபாடு இருக்கக்கூடாது. ஆனால் தமிழக அரசு நடவடிக்கை எடுப்பதில் கல்லூரி நிர்வாகத்தின் மதத்தின் அடிப்படையில் பாரபட்சம் காட்டுகிறது. இது ஜனநாயக போக்கிற்கு நல்லதல்ல என்பதனை அகில இந்திய இந்து மகா சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.
குறிப்பு:
இதன் நோக்கம் என்னவென்றால், இந்துக்கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு ஒரு சட்டமும் மற்ற மதத்தினரால் நடத்தப்படும் பள்ளி கல்லூரிகளுக்கு ஒரு சட்டம் என்று தெரிந்து கொள்ள முடிகிறது.
கல்வி பயிலும் குழந்தைகள் அனைவரும் சமமே, இதில் மதம் பார்க்கக்கூடாது. யுார் தவறு செய்தாலும் நடவடிக்கை அவசியம். எனவே, காவல்துறை சமூகம் இந்த விடயத்தில் தலையிட்டு குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதும் இந்த மனுவின் அடிப்படையில் தாமே முன் வந்து விசாரணை நடத்தி சம்மந்தப்பட்ட நபர்களை கைது செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்களின் சார்பாகவும், சமுதாய நலத்தின் அடிப்படையில் அகில இந்திய இந்து மகா சபா வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறது.
அனுமுதி கோருதல் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் 05.07.2021 அன்று காலை 10.00 மணி அளவில் பிஷப் ஹீபர் கல்லூரியினை கண்டித்து கல்லூரி வாளகத்தினை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த அனுமதி வழங்க கோரி அகில இந்திய இந்து மகா சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.