சன்டே ஸ்பெஷல் மட்டன் எலும்பு குழம்பு.
வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில் நடைபெறுகிறது..
விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான எலும்பு குழம்பு செய்யலாம்.
தேவையான பொருட்கள்
சின்ன வெங்காயம் – 15 (நீளமாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 4 (நடுவில் கீறியது)
இஞ்சி துண்டு – 1 (நசுக்கியது)
பூண்டு பல் – 5 (நசுக்கியது)
தக்காளி – 2
மட்டன் எலும்பு – அரை கிலோ
மல்லித் தூள் – 4 டேபிள் ஸ்பூன்

அரைக்க
தேங்காய் – கால் கப்
மிளகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
கசகசா – முக்கால் டீஸ்பூன்
தாளிக்க
எண்ணெய் – தேவைக்கேற்ப
பட்டை – 1
கிராம்பு – 4
செய்முறை
குக்கரில் எண்ணெயை ஊற்றி தாளித்து சின்ன வெங்காயம், பச்சைமிளகாயை 1 நிமிடம் நன்றாக வதக்கி தக்காளியை சேர்த்து வதக்கவும்.
பின் எலும்பை சேர்த்து நன்கு வேகவைத்து (15 நிமிடம்) அதனுடன் மல்லித் தூள், அரைத்த விழுது, உப்பு போட்டு கலக்கி குக்கரை மூடி சிம்மில் வைத்து வெயிட் போட்டு 25 நிமிடம் கழித்து இறக்கி பரிமாறவும்.
சுவையான எலும்பு குழம்பு ரெடி.