*ரோஸ்மெரி டீ*☕☕
*தேவையான பொருட்கள் :*
பொருள்அளவு :
ரோஸ்மெரி நெட்டுகள் 4 டீ பாக்ஸ் 2 சர்க்கரை மற்றும் பால் தேவைக்கேற்ப
செய்முறை :
மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
சுத்தம் செய்து அலம்பிய ரோஸ்மெரி நெட்டுக்களை ஒரு மைக்ரோவேவ் கிண்ணத்தில் போட்டு ஒன்றரை கோப்பை கொதிநீர் ஊற்றி மூடி, குறைந்தது பத்து நிமிடங்கள் ஊற விடவும்.
இலையின் வாசனை ஊறி நீரும் மெல்லிய பச்சை நிறமாக மாறிவரும் பொழுது, இலைகளை நீக்கிவிட்டு வடிகட்டிய நீரை மீண்டும் கொதிநிலைக்குக் கொண்டு வரவும்.
இரண்டு பாக்கெட் தேயிலையைச் சேர்த்து கடுமையான தேநீராக தயாரித்துக் கொள்ளவும்.
கிண்ணத்திலிருந்து டீ பாக்கை எடுத்து விட்டு பரிமாற போகும் டீ கோப்பையில் தேநீரை ஊற்றிக் கொள்ளவும்.
தேவைக்கேற்ப பால் மற்றும் சர்க்கரை சேர்த்துக் கலக்கவும்.
சுவையான, புத்துணர்ச்சியூட்டும் ரோஸ்மெரி டீ தயார்.