*அதிமுக கல்வெட்டு உடைப்பு*
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் *மு.பரஞ்ஜோதி கடும் கண்டனம்.*
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் உள்ள அந்தநல்லூர் ஒன்றியம் பெட்டவாய்த்தலை பழங்காவேரி பகுதியில் 2011ஆம் ஆண்டு வைக்கப்பட்டுள்ள அதிமுக கல்வெட்டு மர்ம நபர்களால் இரவோடு இரவாக இடித்து தள்ளப்பட்டுள்ளது.
இதனை திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அஇஅதிமுக சார்பாக வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்நிகழ்வு குறித்து அந்தநல்லூர் ஒன்றிய செயலாளர் அழகேசன் பெட்டவாய்த்தலை காவல் துறையில் புகார் அளித்து உள்ளார்.
புகார் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை உயர் அதிகாரிகளை கேட்டுக் கொள்கிறேன்.
என திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர்
*மு.பரஞ்ஜோதி*
தனது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.