Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

வீடு கட்ட, திருஷ்டி எடுக்க , எதிர்மறைசக்தியை போக்க மிகச்சிறந்த நாள்

0

இன்று வாஸ்து பூஜை செய்வதற்கு மிகவும் உகந்த நாள். இந்த நாளில் புதிய வீடு கட்ட வாஸ்து செய்ய, புதிய மனை வாங்க மிக விசேஷமானது. வீட்டை திருஷ்டி சுற்றி போட்டால் வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகள் நீங்கி தரித்திரம் நீங்கும்..

ஒவ்வொருவருக்கும் தான் எவ்வளவு கஷ்டப்பட்டேனும் தனக்கான சொந்த வீடு கட்டிவிட வேண்டும் என்ற எண்ணம் ஆழமாக இருக்கும்.

தற்போதுள்ள காலத்தில் நம்மில் பெரும்பாலானோர் வங்கியில் வீட்டு கடன் வாங்கி வீடு கட்டுவோரும் உண்டு.

வாஸ்து நாட்கள் :

வாஸ்து நாட்கள் 2021
மாதம் தேதி கிழமை ஆங்கில தேதி நேரம் (காலை)
தை 12 திங்கள் 25 ஜனவரி 10.41 – 11.17
மாசி 22 சனி 6 மார்ச் 10.32 – 11.08
சித்திரை 10 வெள்ளி 23 ஏப்ரல் 8.45 – 9.30
வைகாசி 21 வெள்ளி 4 ஜூன் 9.58 – 10.34
ஆடி 11 செவ்வாய் 27 ஜுலை 7.44 – 8.20
ஆவணி 6 ஞாயிறு 22 ஆகஸ்ட் 7.23 – 7.59
ஐப்பசி 11 வியாழன் 28 அக்டோபர் 7.44 – 8.20
கார்த்திகை 8 புதன் 24 நவம்பர் 11.29 – 12.05

 

வாஸ்து பூஜை:
வாஸ்து பிரச்சினைகள் தீர முதலில் மனையடி சாஸ்திரத்தைப் பின்பற்றி வீட்டை கட்டுவது அவசியம்.வாஸ்து பிரச்சினைகளுடன் இருக்கும் வீட்டில் குடியிருப்பதைத் தவிர்ப்பது அவசியம். அதனால் சொந்த வீடு கட்டும் போது வாஸ்து முறைப்படி சரியாக கட்டுவது அவசியம்.

துஷ்ட சக்திகள் விலக :
சிலர் வாடகை வீட்டில் குடியிருந்தாலும், சொந்த வீட்டில் குடியிருந்தாலும், தான் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் கால் காசு தங்கவில்லை. கடன் அதிகரிக்கிறது, உடல்நல பிரச்னை என பலர் புலம்புவதுண்டு.சிலரோ தண்ணீர் பிரச்னை, வாடகை அதிகம் என பிரச்னைகள் இருந்தாலும் வீடு அதிர்ஷ்டமாக இருக்கிறது என சொல்பவர்களும் உண்டு.

 

உங்கள் வீட்டில் உள்ள துஷ்ட சக்திகள், எதிர்மறை எண்ணங்கள் நீங்கி வீட்டில் சுபிட்சம் ஏற்பட, நாட்காட்டியில் வாஸ்து நாள் என குறிப்பிடப்பட்டுள்ள சில நாட்களில் வீட்டை திருஷ்டி சுற்றி போடுவதால் தீமை நீங்கி நன்மை உண்டாகும்.

வீட்டிற்கு திருஷ்டி சுற்றுவது அவசியம். தேங்காய், எலுமிச்சை அல்லது பூசனிக்காய் வைத்து வீட்டை திருஷ்டி கழியுங்கள். இல்லையென்றால் ஒரு கற்பூரத்தால் வீட்டை திருஷ்டி கழித்து வீட்டின் வாசல் முன் கொளுத்துங்கள்.

 

Leave A Reply

Your email address will not be published.