திருச்சி கிழக்கு தொகுதியில் 14 பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்பினை இனிகோ இருதயராஜ் எம்எல்ஏ பொதுமக்களுக்கு வழங்கினார்.
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 8வது மற்றும் 9 எ வார்டுகளில் கொரோனா பெரும் தொற்றில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஏழை எளிய பொதுமக்களுக்கு
14 மளிகை பொருட்கள் அடங்கிய கொரோனா நிவாரணப் பொருட்களை திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் பயனாளிகளுக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பகுதி கழக செயலாளர்கள் மு. மதிவாணன்,,மண்டி சேகர், வட்டகழக செயலாளர்கள் .தசரதன் சண்முகம் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.