திருச்சி மாவட்டத்தில் 9 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இதை தொடங்கி வைக்கும் விதமாக பெரிய சூரியூர் நெல் கொள்முதல் பணிகளை பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
திருச்சி மாவட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அமைக்கப்பட்டுவருகிறது.
நடப்பு காரீப் பருவத்தில் 2020 – 21ம் ஆண்டில் 56 நெல் கொள்முதல் நிலையங்களில் திறக்கப்பட்டு 55 ஆயிரத்து 265 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.
இதில் சன்னரகம் 41 ஆயிரத்து 306 மெட்ரிக்டன். பொது ரகம் 13,959 மெட்ரிக் டன் ஆகும்.
சன்னரக நெல் ஒரு குவிண்டாருலுக்கு 1958 ரூபாயும், பொது ரக நெல்லுக்கு 1918 ரூபாயும் வழங்கப்பட்டது. இதன் மூலம் 12 ஆயிரத்து 678 விவசாயிகளுக்கு 107 கோடி ரூபாய் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.
தற்போது கோடை பருவத்தை முன்னிட்டு விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யும் பணியை மேற்கொள்ள 9 இடங்களில் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இதன்படி திருவெறும்பூர் வட்டத்தில் குண்ரூர், சூரியூர், ஸ்ரீரங்கம் வட்டத்தில் நவலூர் குட்டப்பட்டு, மணிகண்டம், பூங்குடி, மணப்பாறை வட்டத்தில் மரவனூர், துறையூர் வட்டத்தில் பி.மேட்ரூர், ஆலத்துடையான்பட்டி, வைரிசெட்டிபாளையம் ஆகிய இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையங்களை தொடங்கி வைக்கும் விதமாக சூரியூர் அமைக்கப்பட்டுள்ள நிலையில் நெல் கொள்முதல் செய்யும் பணியை பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவராசு உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.