Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

உலாமாக்களுக்கு ரூ.7000 நிவாரண நிதி வழங்க அரசுக்கு காயல் அப்பாஸ் வேண்டுகோள்.

0

*உலமாக்களுக்கு கோரோனா நிவாரண நிதியாக ரூ 7000 வழங்க வேண்டும் : முதல்வருக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை !*

உலமாக்களுக்கு கோரோனா நிவாரண நிதியாக ரூ 7000 வழங்க வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் மாநில தலைவர் காயல் அப்பாஸ் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது.

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா பெருந்தொற்று பரவலை தடுத்து மக்களை பாதுகாக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வரும் மாண்பு மிகு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டுகளையும் , நன்றியையும் , ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் சார்பாக தெரிவித்து கொள்கிறோம்.

கோரோனா பரவலை கட்டு படுத்தும் நோக்கத்தோடு மத வழிபாட்டுத்தலங்கள் மூட வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவால் தமிழகத்திலுள்ள அணைத்து பள்ளிவாசல்கள் மூட பட்டன. மேலும் பள்ளிவாசல்கள் மூட பட்டதனால் இதில் பணிபுரியும் உலமாக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் மிகவும் பாதிக்க பட்டு உள்ளனர் .

மேலும் தமிழகத்தில் 10000 க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் உள்ளன. இதில் பணியாற்ற கூடிய உலமாக்களுக்கு மாதம் ஊதியமாக மிக குறைவான ஊதியம் மட்டுமே வழங்க படுகிறது. இந்த வருமானம் அவர்களின் பொருளாதாரம் தேவைகளை பூர்த்தி செய்யும் நிலையில் இல்லை.

எனவே : தமிழக முழுவதும் உள்ள உலமாக்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ 7000 வழங்க தமிழக முதல்வர் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி எழுச்சி கழகம் சார்பாக வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம் . இவ்வாறு இக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.