இன்று காலை மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமத்தின் நிறுவனர் சீனிவாசன் அவர்கள் இணைந்து அலுவலகத்தை திறந்து வைத்தனர்.
அலுவலகம் திறப்பு நிகழ்வில் திருச்சிராப்பள்ளி (வடக்கு) மாவட்ட மாவட்ட செயலாளரும் முசிறி சட்டமன்ற உறுப்பினருமான காடுவெட்டி ந.தியாகராஜன் . மணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சீ.கதிரவன் , திமுக ஒன்றிய செயலாளர்கள், காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் கூட்டணி கட்சி நிர்வாகிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
மேலும் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர், மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர்கள், திமுக பொதுக்குழு உறுப்பினர்கள், கிளை தலைவர்கள், மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் அனைவரும் முக கவசம் அணிந்து தகுந்த சமூக இதேவேளை உடன் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த அனைத்து தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது