ஸ்ரீரங்கம் கோவிலில் ஏழை, எளிய மக்களுக்கு உணவு பொட்டலங்கள் : அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அரங்கநாதசுவாமி திருக்கோயில் ஸ்ரீரங்கத்தில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நாள்தோறும் முகக்கவசம், கபசுர குடிநீர் மற்றும் உணவு பொட்டலங்கள் வழங்கப்படுகிறது.
திருச்சி மற்றும் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகள் உடனிருந்து கவனித்து கொள்வோர் மற்றும் களப்பணியாளர்கள் ஆகியோருக்கு நாள்தோறும் உணவு வழங்கப்படுகிறது.
அந்த வகையில் திமுக முதன்மை செயலாளரும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சருமான கே.என்.நேரு ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் ஏழை எளிய மக்களுக்கு கோவில் சார்பில் உணவு பொட்டலங்கள், கப சுர குடிநீரை வழங்கினார்.
அப்போது ஸ்ரீரங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.