Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இந்தியாவில் கொரோனாவால் 577 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர். அவர்களை கடத்தி விற்கவும் முயற்சி.

0

 

இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

உலக அளவில் கொரோனா பாதிப்புகளுக்கு அமெரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. இந்த வரிசையில், 3 லட்சம் உயிரிழப்புகளை கடந்து இந்தியா 3வது இடத்தில் உள்ளது.

கொரோனா பெருந்தொற்றுக்கு நாடு முழுவதும் 577 குழந்தைகள் பெற்றோரை இழந்து உள்ளனர்.

இந்த குழந்தைகள் தங்களுடைய நெருங்கிய உறவினர் அல்லது பிற குடும்ப உறுப்பினர்களுடன் தற்போது வசித்து வருகின்றனர்.

இதனை மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகத்தினரிடம் இருந்து பெற்ற தரவுகளின் அடிப்படையில் மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

அவர்கள் அனைவரையும் மாநில அரசுகளின் உதவியுடன் மத்திய அரசு தொடர்ச்சியாக கண்காணித்து வருகிறது.

பெற்றோரை இழந்து ஆதரவற்ற நிலையில் இருக்கும் குழந்தைகளை பராமரிக்க மற்றும் அவர்களின் நலனுக்காக நாடு முழுவதுமுள்ள மாவட்டத்திற்கு தலா ரூ.10 லட்சம் தொகையை அரசு விடுவித்து உள்ளது.

எனினும் சில அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் ஆதரவற்ற குழந்தைகளின் தரவில் குழப்பங்களை விளைவித்து வருவது அறிந்து மத்திய அரசு வேதனை தெரிவித்து உள்ளது. சில குழந்தை கடத்தல் முயற்சி சம்பவங்களும் நடந்துள்ளன. இதனை தொடர்ந்து போலீசாரும் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.