ரேஷன் கடைகள் நாளை முதல் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை செயல்படும் என தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் மே 31 வரை முழு முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் நியாய விலைக் கடைகளும் இன்று மூடப்பட்டிருந்தது.
இந்நிலையில், மக்களின் நலன் கருதி நாளை முதல் காலை 8 மணிமுதல் பிற்பகல் 12 மணிவரை நியாய விலைக் கடைகள் இயங்க தளர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ரேஷன் கடைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.