Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

25-ஆம் தேதி முதல் இரு சக்கர வாகனங்களில் செல்ல அனுமதி கிடையாது தமிழக அரசு உத்தரவு.

0

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த இரண்டு வாரமாக தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருந்து வந்தது.

எனினும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் நாளை முதல் தளர்வுகளற்ற கடுமையான முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஊரடங்கில் அத்தியாவசிய பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள் தடையின்றி செயல்பட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

மேலும் இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

* மே 25 முதல் தொழிற்சாலை பணியாளர்கள் இருசக்கர வாகனங்களில் செல்ல அனுமதி கிடையாது.

* மே 25 முதல் தொழிற்சாலைகளின் வாகனங்கள் இ-பதிவு செய்து கொள்ள வேண்டும்.

* மே 25 முதல் தொழிற்சாலைகள் இ-பதிவு செய்துள்ள வாகனங்களில் மட்டுமே பணியாளர்களை அழைத்து வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

* தொழிலாளர்களை அழைத்து வர 4 சக்கர வாகனங்களை ஏற்படுத்துக் கொள்ளவும் நிறுவனங்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

முழு ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் ஆலைகள் செயல்பட ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.