Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழக முதல்வர் இன்று முதல் ஐந்து மாவட்டத்தில் ஆய்வு. பயண விபரம் ……

0

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதை தடுத்து நிறுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை அரசு கடுமையாக அமல்படுத்துகிறது. அதோடு, மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகள் குறைந்துள்ள சூழ்நிலையில், அங்கு கூடுதல் ஆக்சிஜன் படுக்கை வசதிகள் உருவாக்கப்படுகின்றன.

மேலும், அதற்கான மாற்று வசதிகளையும் அரசு செய்து வருகிறது. பள்ளி, கல்லூரி, அரசு கட்டிடங்களில் கொரோனா சிகிச்சை மையங்களை அரசு உருவாக்கி வருகிறது.

மேலும், ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் தடுப்பூசி தயாரிப்பை மாநிலத்திலேயே செய்து கொள்ள பல்வேறு ஏற்பாடுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார். தடுப்பூசியை தயாரித்து அளிப்பதற்காக சர்வதேச அளவிலான டெண்டர்-க்கான அறிவிப்பையும் அவர் வெளியிட்டுள்ளார்.

கொரோனா சிகிச்சை தொடர்பான மருத்துவ சாதனங்களை தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு தேவையான உதவிகளை செய்துதர வேண்டும் என்று டிட்கோ நிறுவனத்திற்கும் அவர் உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

இப்படி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், அடுத்த கட்டமாக மாவட்டங்களுக்கு நேரடியாகச் சென்று கொரோனா பரவல் தடுப்புப் பணிகளை ஆய்வு செய்யவும், கலெக்டர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை கலந்தாலோசிக்கவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.

அதன்படி முதற்கட்டமாக அவர் இன்று (20-ந் தேதி) காலை சேலம் மாவட்டத்திற்கு புறப்பட்டுச் செல்கிறார். இதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப்பட்டு 9.15 மணிக்கு சேலம் விமான நிலையத்தை சென்றடைகிறார்.

9.15 மணிக்கு காலை சிற்றுண்டியை முடித்துவிட்டு, 9.45 மணிவரை அதிகாரிகள் சிலருடன் ஆலோசனை மேற்கொள்கிறார். பின்னர் சேலத்தில் இருந்து கார் மூலம் புறப்பட்டு சேலம் இரும்பு ஆலை வளாகத்திற்குச் செல்கிறார்.

அங்கு உருவாக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் கூடிய புதிய சிகிச்சை மையத்தை பார்வையிட்டுவிட்டு, காலை 10.45 மணிக்கு அங்கிருந்து புறப்படுகிறார்.

பின்னர் பிற்பகல் 12.15 மணிக்கு திருப்பூர் மாவட்டம் நேதாஜி அப்பேரல் பூங்காவிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தருகிறார். அங்கு 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணிகளை தொடங்கி வைத்துவிட்டு, அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.

பின்னர் அங்கிருந்து பிற்பகல் 12.45 மணிக்கு புறப்பட்டு 1.30 மணிக்கு கோவை விருந்தினர் மாளிகைக்கு (சர்க்யூட் அவுஸ்) செல்கிறார். அங்கு கோவை மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள், சுகாதாரத் துறை அலுவலர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார்.

பின்னர் அங்கிருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு கொடிசியா மைதானத்திற்கு 5.15 மணிக்கு செல்கிறார். அங்கு அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை வசதிகளை பார்வையிட்டுவிட்டு, மருத்துவ அதிகாரிகள், டாக்டர்களுடன் கலந்தாலோசனை செய்கிறார்.

அதைத் தொடர்ந்து அங்கிருந்து 5.45 மணிக்கு புறப்பட்டு 6 மணிக்கு குமரகுரு கல்லூரிக்குச் செல்கிறார். அங்கு அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை பார்வையிடும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மருத்துவ அதிகாரிகள், டாக்டர்களுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.

பின்னர் அங்கிருந்து 6.30 மணிக்கு புறப்பட்டு கோவை விமான நிலையத்தை மாலை 6.45 மணிக்கு சென்றடைகிறார். இரவு 7.30 மணிக்கு விமானம் மூலம் புறப்பட்டு மதுரைக்கு இரவு 8 மணிக்கு செல்கிறார். மதுரை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மதுரை விருந்தினர் மாளிகையை 8.30 சென்றடைகிறார்.

நாளை (21-ந் தேதி) காலை 9.45 மணிக்கு மதுரை விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்பட்டு 10 மணிக்கு மதுரை கலெக்டர் அலுவலகத்திற்குச் செல்கிறார். அங்கு கலெக்டர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் கலந்தாலோசனை செய்கிறார்.

10.45 மணிக்கு அங்கிருந்து புறப்படும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தோப்பூர் மருத்துவமனைக்கு செல்கிறார். அங்குள்ள கொரோனா சிகிச்சை வசதிகளை பார்வையிட்டுவிட்டு, 11.30 மணிக்கு சாலை மார்க்கமாக திருச்சிக்கு புறப்படுகிறார்.

திருச்சி விருந்தினர் மாளிகைக்கு பிற்பகல் 1.30 மணிக்கு வந்துடைகிறார். இங்கு திருச்சி மாவட்ட கலெக்டர், உயர் போலீஸ் அதிகாரிகள், சுகாதாரத் துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.

விருந்தினர் மாளிகையில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு திருச்சி .எம்.சி. மருத்துவமனைக்கு 5.10 மணிக்கு செல்கிறார். அங்குள்ள கொரோனா சிகிச்சை வசதிகளை ஆய்வு செய்யும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 5.30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு 5.45 மணிக்கு என்.ஐ.டி. செல்கிறார்.

அங்கு மருத்துவ அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொள்ளும் அவர், அங்கிருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு 6.15 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை வந்தடைகிறார். அங்கு 6.45 பத்திரிகைகளுக்கு பேட்டி அளிக்கிறார்.

பின்பு 7.30 மணிக்கு விமானம் முலம் புறப்பட்டு 8.15 மணிக்கு சென்னை சென்று அடைகிறார்.

Leave A Reply

Your email address will not be published.