Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கொரோனா அதிகரிப்புக்கு கும்பமேளாவை காரணம் சொல்ல மடாதிபதிகள், ராம்தேவ் கண்டனம்.

0

கொரோனா பரவல் அதிகரிப்புக்கு கும்பமேளாவை காரணமாக சொல்வதற்கு பாபா ராம்தேவ் மற்றும் மடாதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

யோகா குரு பாபா ராம்தேவ் கூறியதாவது:-
‘டூல்கிட்’ தயாரித்து கும்பமேளாவையும், இந்து மதத்தையும் அவமதிக்க பெரிய சதி நடந்துள்ளது. இது பெரிய குற்றம். 100 கோடிக்கு மேற்பட்ட இந்துக்களை அவமதிப்பதை அவர்கள் நிறுத்த வேண்டும். இத்தகைய இந்து விரோத, இந்திய விரோத சக்திகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

ஜூனா அகாராவை சேர்ந்த சுவாமி அத்வேஷானந்த கிரி கூறியதாவது:-
கும்பமேளாவை விமர்சிப்பது, இந்துக்களின் நம்பிக்கையையும், பாரம்பரியத்தையும் அவமதிக்கும் செயல்.

கும்பமேளாவின்போது, மற்ற மாநிலங்களில் கொரோனா பாதிப்பு உயர்ந்த அளவுக்கு உத்தரகாண்டில் உயரவில்லை என்று புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. பிரதமர் வேண்டுகோளுக்கு பிறகு கும்பமேளா வெறும் அடையாளத்துக்குத்தான் நடந்தது. எனவே, பொய் பிரசாரத்தை கண்டிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

சுவாமி கைலாசானந்த கிரி கூறியதாவது:-
கும்பமேளாவை கொரோனா பரவலுடன் முடிச்சு போடுவது துரதிருஷ்டவசமானது. வழக்கமாக கோடிக்கணக்கானோர் பங்கேற்கும் கும்பமேளாவுக்கு, இந்த தடவை லட்சக்கணக்கானோர் கூட வரவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.