பொது மக்கள் மற்றும் காந்தி மார்க்கெட் மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகளுக்கு
மாநகராட்சி ஆணையர் சு.சிவசுப்பிரமணியன்
அறிவிப்பு
திருச்சி மாவட்டம் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் தற்போது கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தினந்தோறும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி
திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து மொத்தம் மற்றும் சில்லரை வியாபாரம் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டு மேற்படி வியாபாரம் மேலப்புலிவார்டு ரோடு காமராஜர் வளைவு முதல் வெல்லமண்டி சாலை சந்திப்பு வரை கீழ்புறம் இரவு மொத்த வணிகமும் மேல்புறம் சில்லரை வணிகம்
காலை 06.00 மணி முதல் 10.00 வரை 16.05.2021 இரவு முதல் மறு உத்திரவு வரும் வரை நடைபெறும் என திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பாக தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
என திருச்சி மாவட்ட மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.